

“கல்வி கரையில் கற்பவர; நாள்சில
மெல்ல நினைக்கிற் பிணிபல.”
என்கின்றது நாலடியார். சில வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவுடைய மாந்தர் கரைதுறையற்ற கல்வியை முற்றாகக் கற்றல் முடியாதென்பது இதன் பொருள். எனினும் பரந்துபட்ட இக்கல்வியில் சிற்றளவையேனும் கற்றுச் சிந்தையிளருத்தி, அறிவுச் செல்வத்தைச் சிரத்தையுடன் தேடும்போதே மனித வாழ்வு செழிப்படைகிறது. மனிதன் மனிதனாகிறான். கல்வியின் மேன்மை பற்றி அன்று தொட்டு அன்று தொட்டு இன்று வரை பல நுhல்களும் பழமொழிகளும் பறைசாற்றி வருகின்றன.
“இளமையில் கல்வி சிலையில் எழுத்து”
என்பர். அதாவது நாம் இளவயதிலிருந்தே கல்வியைக் கற்று வந்தால் அது நம் எதிர்காலத்தின் ஆணி வேராக் திகழும். கல்வியின் மேன்மையையும் சிறப்பையும் பற்றி அறிந்ததாலன்றோ திருவள்ளுவரும் உலகப் பொதுமறையாம் திருக்குறளில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர;த்துகிறார். கல்வி கற்றவர்களிற்து மட்டுமே முகத்தில் கண்கள் இருப்பதாகவும் பேதையருக்கு கண்களிற்குப் பதிலாக முகத்தில் இரு புண்களே உள்ளன என்றும் சிற்றறிவுடையவர்களிற்கு நுட்பமான அறிவு சில வேளைகளில் காணப்பட்டாலும் அதனை அறிவென பெரியார் கொள்ளமாட்டார்கள் எனவும் கல்வி கற்றோரே மனிதர்கள் அன்றி கற்காதோர் விலங்குகளே எனவும் திருவள்ளுவர் கல்வியின் மேன்மை பற்றி வலியுறுத்துகின்றார்.
இங்கனம் கல்வியை பற்றி பவர் அறிந்திருந்தும் அறியாமை எனும் இருளில் அகப்பட்டவர்களாகி நம் அறிவை இழந்து அழியாச் செல்வத்தை அடைய முயாலாமல் நிலையின்றி அழிந்து போகும் பொருட்களையே நிலையாகப் பிழைபட நினைத்து அவற்றை பெறுவதிலும் அவற்றை நுகர்வதிலுமே நமது காலத்தைக் கழித்து வருகின்றோம். இதனால் இம்மையிற் பழியும் மறுமையின் துன்பமும் எய்துகின்றோம். ஆனால் இவற்றையெல்லாம் துறந்து கல்வியில் நமது நாட்டத்தைச் செலுத்தினால் அதனால் உண்டாகும் மேன்மை நிலையில்லாச் செல்வத்திலிருந்து கிடைக்கும் நன்மையை விடப் பன்மடங்கு பெரியதாகும். இங்கனம் கல்வியின் உயர்ச்சியை சொல்லப் போத்த ஔவையார் கற்றோனை மன்னனுடன் ஒப்பிடுகின்றார்.
“ மன்னனும் மாசறக் கறறோனை சீர் துாக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்-மன்னனுக்குத்
தன்தேச மல்லாற் சிறப்பில்லைக் கற்றோர்குச்
சென்றவிட மெல்லாஞ் சிறப்பு ”
இங்கனம் மன்னனையும் கற்றோனையும் ஒப்பிடுகையில் மன்னனுக்குத் தன் தேசத்தில் மட்டும் தான் சிறப்பு. ஆனால் கற்றோனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. இனி கல்வியை பெறுவதற்கு நாம் மிகவும் முயன்று வருவதோடு உயர்ந்த நுால்களையும் கற்று வரும் போதே அந்நுால்களிற் சொல்லப்பட்ட நல்லொழுக்கங்களிலும் நாம் பழகி வருதல் வேண்டும். அதற்காக கல்வி கிடைத்ததையிட்டு செருக்கு அடையாமல் பணிந்த சொல்லும் பணிந்த செயலும் உடையமையாய் எல்லா உயிர்களிடத்தும் அனபும் இரக்கமுங்காட்டி நல்லொழுக்கத்தில் வாழுவது எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளான சிவபெருமானை மனமொழி மெய்களால் நினைந்தும் வாழ்தியும் வணங்கியும் உலக வாழ்க்கையை இனிது நடாத்தி நாமும் பயன் பெற்றுப் பிறஉயிர்களையும் பயன்பெறச் செய்து வருதலே நாம் பெற்ற கல்வியைப் பயன்படுத்தும் முறையாகும்.
கல்வியினாலேயே மனிதன் அறிவினால் மட்டும்மன்றி உள்ளத்தாலும் உயருகிறான். வாழ்வினையும் வாழ்வின் விழுமியங்களையும் புலப்படுத்தும் இலக்கியங்கள் கட்டுரைகள் கவிகைகள் முதலானவற்றைப் படிப்பதால் வாழ்வில் தான் கண்டறியாத புதிய புதிய மாந்தரோடு பழகுகிறான்; அவர்களின் குணாதியங்களை உணருகிறான்; வாழ்வின் பல கோணங்களையும் காணுகிறான். பல பல புதிய அனுபவங்களைப் பெறுகிறான். நல்லன எவைன தீயவை எவை எனப் பகுத்துணரும் பண்பை பெறுகிறான். இதனால் அவனது உள்ளம் விரிவடைகிறது; பண்படுகிறது. ஏதிர;கால வாழ்வுக்குத் தம்மை ஆயத்தஞ் செய்து கொள்ளும் உன்னதநிலையை அடையப் பெறுகிறான்.
the school which gives education...............
the books which gives knowledge..............
Advantages of learning.
our only aim is like an arrow............is education.
Introduction.
Education
educates a man how to behave in the society.
The man who
finished higher study successfully will get the respect and responsibility in
the society.
We can’t stop
studying after finishing higher study because a man can’t fully learn. So he
have to search for information in this information.
In the past, many
great persons and many books said about the education.
Proverbs related to the education.
Strike while the
iron is hot. Make hay while the sun shines.
அலை மோதும் போதே தலை முழுகு; காற்றுள்ளபோதே துாற்றிக் கொள்.
That means, we don’t miss the oppurtunities in
eduction.
அதாவது நாம் சந்தர்ப்பங்களை தவற விடக்கூடாது.
Too much of
anything is good for nothing.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்.
That means, we have a limit in studing. If we learn
over that will make many problems.
அதாவது எதற்கும் ஒரு அளவு உண்டு. அதை மீறினால் ஆபத்துத் தான்.
Look before you
leap.
ஆழமறியாமல் காலை விடாதே.
That means, we have to plan before studing.
அதாவது நாம் எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டும்.
Distance lends enchantment
to the view.
இக்கரைக்கு அக்கரை பச்சை.
That means, we don’t go to another subjects before
complete one subject successfully.
அதாவது நாம் ஒரு விடயத்தை முடித்து விட்டே அடுத்த விடயத்திற்கு செல்ல வேண்டும்.
Union is
strength.
ஒற்றுமையே பலம்.
That means, we have to work corporately.
அதாவது ஒற்றுமையாக செயற்பட்டால் அதன் பலம் அதிகம்.
Art is long and
life is short.
கல்வி கரையில கற்பவர; நாள் சில.
That means, leaning is unlimited but our life time is
limited. So, we have to search for more information in our free times.
அதாவது கல்விக்கு வரையறையே இல்லை. ஆனால் எமது வாழ்நாள் காலம் குறைவு.அதனால் நாம் எமது ஓய்வு நேரத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
Health is wealth.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
That means, we must maintain our body tidely. So, we
can study healthly without any diseases.
அதாவது எமது உடலை சுத்தமாக வைத்திருப்பதால் எந்த வித நோய் இன்றி படிக்கலாம்.
Blessed are the
meek; for they shall inherit the earth.
பொறுத்தார் புமி ஆள்வார்.
That means, we have to be patient to the oppurtunity.
அதாவது நாம் ஒரு நல்ல சந்தர்ப்பத்திற்காக காத்திருக்க வேண்டும்.
group study....................
practicing in exam...............
3 comments:
best result
best result
அருமையான பதிவு
https://tamilmoozi.blogspot.com/2020/04/blog-post_29.html?m=1
Post a Comment